சூடான செய்திகள் 1

இன்று (17) பூமியில் இருந்து ‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படுகிறது

(UTV|COLOMBO) இலங்கை பொறியியலாளர்கள் இரண்டு பேர் உருவாக்கிய ‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் இன்று(17) பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுப்பாதைக்கு ஏவப்படவுள்ளதாக ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

குறித்த மையத்தின் ஆராய்ச்சி பொறியியலாளர்களான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சம்பிகாவினாலும் ஜப்பானின் உதவியுடன் க்யூஷு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘ராவணா – வன்’ நானோ செயற்கைக்கோள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி இவ்வாறான செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பித்தமை மற்றும் இந்த செயற்கைக்கோளுக்கு ‘ராவணா – வன்’ என்ற பெயரை சூட்டியமை, ஆர்தர் சி கிளார்க் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னகேவின் ஆலோசனைக்கு அமையவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் க்யூஷு பல்கலைக்கழகத்தில் பர்ட்ஸ் என்ற விசேட திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ‘ராவணா – வன்’ செயற்கைக்கோள் சுமார் ஆயிரம் கன சென்ட்மீற்றர் அளவில் மற்றும் 1.1 கிலோ கிராம் எடையுடன் காணப்படுகிறது.

 

 

 

 

Related posts

நிலாவுக்கு செல்லும் முதல் பெண்

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் உயிரிழப்பு

“தனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை” – அமைச்சர் ரிஷாத்