சூடான செய்திகள் 1

ஜுலை மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம்

(UTV|COLOMBO)  ஜுலை மாதம் முதல் 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் ஓய்வூதியம்  பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற 5 இலட்சம் பேர் இதன்மூலம் ஓய்வூதிய சம்பள அதிகரிப்பைப் பெறுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன் கீழ் ஓய்வூதியம பெறுவோர்களின் மாதாந்த சம்பளம் 2800 மற்றும் 24 ஆயிரம் ரூபாவுக்கும் இடையில் அதிகரிக்கும். 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய சம்பளத்தில் நிலவிய முரண்பாடு நீக்குவதன் ஊடாக ஓய்வூதியம பெறுவோர்களுக்கு நிவாரணம் கிடைக்கின்றது.

அதற்கமைவாக ஓய்வூதியம் பெற்ற அலுவலகப் பணியாளர் உதவியாளர் தரம் ஒன்று ஓய்வூதியம பெறுவோர்களின் சம்பளம் 2800ஆல் அதிகரிக்கிறது. முகாமைத்துவ உதவியாளர் தரம் 1 ஓய்வூதியம பெறுவோர்களுக்கு 5,200 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கிறது. ஆசிரிய சேவையில் தரம் ஒன்றில் ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் 9,200 ஆல் அதிகரிக்கிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

download

 

 

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஶ்ரீ.சு.கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐந்து  பேர் பதவி நீக்கம்…

ஜனாதிபதி கென்யா விஜயம்