(UTV|COLOMBO) இந்திய கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் இடது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் தன்மை குறித்து தீர்மானிப்பதற்காக இன்று மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் பின்னர் அவர் வலியை உணர்ந்த நிலையில், அடுத்தப்போட்டிகளில் விளையாடுவதற்கு இந்த உபாதை தடையாக இருக்குமா? என்று இந்த பரிசோதனை மூலம் தெரியவரும் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான நேற்றைய உலகக்கிண்ண லீக் போட்டி மழையினால் முற்றாக கைவிடப்பட்டது.