வகைப்படுத்தப்படாத

ஆஷிபா பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளியாக அறிவிப்பு!

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பிராந்தியத்தில் எட்டு வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறுபேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2018ம் ஆண்டு ஜனவரி மாதம் கத்துவா நகரில் உள்ள வனப்பகுதி ஒன்றில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை விடுவிக்குமாறு இந்துவாத அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் போராட்டம் நடத்தியதை அடுத்து, சர்ச்சையாக மாறியது.

குறித்த எட்டு பேரில் ஆறு பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

 

 

 

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக 91 பேர் பலி : 110 பேரை காணவில்லை!

இத்தாலியில் அவசரநிலை பிரகடனம்…

අලි රොෂාන් ඇතුළු 8ක් නඩුව අවසන් වනතුරු රක්ෂිත බන්ධනාගාරයට