சூடான செய்திகள் 1

இன்று முதல் கடுமையாகவுள்ள வீதி ஒழுங்கை சட்டம்

(UTV|COLOMBO) போக்குவரத்து ஒழுங்கை விதிகள் இன்று முதல் கட்டாயமாக அமுலாக்கப்படும் என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஒழுங்கை விதிகளை சாரதிகள் பழகிக் கொள்வதற்காக ஏற்கனவே 2 வாரகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய  இன்று முதல் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், தொடருந்து வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல், மதுபானம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதம் 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளாவதனால் ஏற்படும் உயிரிழப்பிற்காக அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாவிருந்து, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையும், சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் விதிமீறலுக்காக நான்கு வேக பிரிவுகளின் அடிப்படையில் 3 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதம் அறவிடப்படவுள்ளது.

மேற்படி இந்தச் சட்டம் விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

சர்வதேச சுற்றுலா ஆராய்ச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

அதிக வெப்பம் – கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டுகோள்