சூடான செய்திகள் 1

மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்திக்க உள்ளோம்

(UTV|COLOMBO) மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையினரை சந்தித்து நாம் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த திங்கட்கிழமை இராஜினாமாக் கடிதத்தை, அறிக்கை ஒன்றின் ஊடாக கூட்டாகவே கையளித்ததாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் தனித்தனியாகவே இராஜினாமாக் கடிதங்கள் கையளிக்கப்பட வேண்டும் எனவும், எனினும் நோன்பு பெருநாள் காரணமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சொந்த ஊரிற்கு சென்றதனால், இராஜினாமாக் கடிதத்தை கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், மகாநாயக்க தேரர்களின் கருத்துகளை தாம் மதிப்பதாகவும், தமக்கு அறிவிப்பொன்றை விடுத்ததற்காக அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, தமது குழு ஒன்று விரைவில் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து விளக்கமளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்

ஜனாதிபதி நாளை நேபாளத்திற்கு விஜயம்