சூடான செய்திகள் 1

அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் மற்றும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவும் தமது நாடு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் செல்லும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்..

இதேவேளை, இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புத் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி ரணில்பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு!

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி?

இன்று பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு