(UTV|COLOMBO) அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிர்வரும் 11ம் திகதி இந்த செயன்முறை பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகத் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செயன்முறை பயிற்சி இரண்டு நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நேர்முகப் பரீட்சையின் பின்னர் 26 பேர் அலுக்கோசு பதவிக்காகத் தெரிவு செய்யபபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் இந்தச் செயன்முறை பயிற்சியின் பின்னர் இருவர் அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.