(UTV|COLOMBO) கடற்படையினர் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் கடற்கரையில் இருந்து 70 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கேரள கஞ்சா கொண்டு செல்வதற்கு தயார் செய்யப்பட்டிருந்த நிலையில், கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.