கிசு கிசு

பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான  பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள், அத்­து­மீ­றல்கள்

(UTV|NEW ZEALAND) நியூ­ஸி­லாந்து பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான  பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள், அத்­து­மீ­றல்கள் மற்றும் கேலிப்­பே­ச்சுகள்  இடம்­பெற்று வந்­துள்­ள­தாக  புதிய சுயா­தீன விசா­ர­ணை­யொன்று தெரி­விக்­கி­றது.

இது தொடர்பில்  அந்­நாட்டு பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் திரேவர் மெயிலார்ட் தெரி­விக்­கையில்,  இது சகிப்­புத்­தன்மை காண்­பிக்க முடி­யாத தீவிர  நிலை­மை­யாகும் எனக் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்ற எல்­லைக்குள்  பணி­யாற்றும் 14 பேர் தாம் அங்கு பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக  தெரி­வித்­துள்­ள­தாக அந்த 120 பக்க விசா­ரணை அறிக்கை தெரி­விக்­கி­றது.

இத்துடன் ஒரே மனி­தரால்  3 மோச­மான பாலியல் தாக்­குதல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தாக  அந்த அறிக்கை  கூறு­கி­றது.

குறித்த குற்­றச்­சாட்டுக்­குள்­ளான தனி­நபர் தொடர்ந்தும் பாரா­ளு­மன்­றத்தில் பணி­யாற்றிக் கொண்­டி­ருப்­ப­தாக தான் நம்­பு­வ­தாக திரேவர் மெயிலார்ட் கூறினார்.

இந்­நி­லையில் அந்­நாட்டு பிர­தமர் ஜசிந்தா அர்டேர்ன் இது தொடர்பில் கலந்­து­ரை­யாட திரேவர் மெயி­லார்ட்டு­டனும் ஏனைய கட்சி உறுப்­பி­னர்­க­ளு­ட­னு­மான கூட்­ட­மொன்றை  கூட்ட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

 

Related posts

வழிதவறிய சிறுவனை 2 நாட்களாகப் பாதுகாத்த கரடி

இந்தியா ராணுவ தொப்பி விவகாரம்-பாகிஸ்தான் குற்றச்சாட்டு

குருணாகலில் பொது இடத்தில் மாணவிகளின் மோசமான செயற்பாடு!