(UTV|COLOMBO) நேற்று இடம்பெற்ற பயிற்சி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணியுடன் , இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 339 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 42.3 ஓவர்களில் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.