வகைப்படுத்தப்படாத

சூரத் நகரில் திடீர் தீ விபத்து-20 பேர் பலி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 குழந்தைகள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது.

இன்று(24) மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் வகுப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 குழந்தைகள் சிக்கி பரிதாபமாக பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடி வருகி்ன்றதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

ஜெர்மனியில் இரு ரெயில்கள் மோதல்

Ex-UNP Councillor Royce Fernando Remanded

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட ஜாதிக ஹெல உறுமய