சூடான செய்திகள் 1

அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவு ஜூலை மாதம் முதல்

(UTV|COLOMBO) அரச ஊழியர்களுக்கு 2500 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கும் சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதோடு இந்த கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வழங்க இம்முறை பாதீட்டின் மூலம் பரிந்துரைக்கப்பட்டது.

திறைச்சேரியின் அனுமதியுடன் அரச நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் அமைச்சுக்களில் செயலாளர்கள் , மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு மேற்படி சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாய் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்பட்டாலும் , அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 7800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

விபத்தில் உயர்தர மாணவர் பலி

நாலக டி சில்வா நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு