(UTV|COLOMBO) கைது செய்யப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்கு, ஹொரவபொத்தானை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 2லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கையூட்டல் வழங்க முற்பட்டவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தடுப்பில் இருந்த அவர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.