(UTV|COLOMBO) சீகிரிய குன்றை பார்வையிட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்றைய தினம் மாத்திரம் வருகைத் தந்ததாக வீடு, நிர்மானம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 18ம் திகதி முதல் இன்று வரை சீகிரிய மலைக் குன்றை பார்வையிடுவதற்காக கட்டணம் அறவீடு நிறுத்தப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகும் என அந்த அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சீகிரிய குன்றை இலவசமாக பார்வையிடுவதற்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகிறது.