சூடான செய்திகள் 1

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஒருநாள் சேவையூடாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 வரையான விண்ணப்பங்கள் கிடைக்க பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதோடு ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1500 வரையான விண்ணப்பங்களே கிடைக்க பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான வியானி குணதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம் என்பவற்றை வைத்திருந்தவர்களே தற்போது தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்வதாக ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்