சூடான செய்திகள் 1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

(UTV|COLOMBO) தற்பொழுது நிலவும் காலநிலைக்கு மத்தியில் பல மாவட்ட்ங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

தற்போதைய காலநிலையின் காரணமாக நுளம்புகள் பரவக்கூடிய நிலை காணப்படுகிறது. இதனால் வாரத்தில் 30 நிமிடங்களில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சுற்றாடல் பகுதிகளை சுத்தம் செய்வதில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி ,சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

Related posts

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்

தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள் தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க