கேளிக்கை

61 நாட்கள் இரவில் படமான கார்த்தியின் கைதி

(UTV|INDIA) சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்துக்கு பிறகு கார்த்தி நடிக்கும் கைதி படத்தை இயக்கியுள்ளார், லோகேஷ் கனகராஜ். அவர் கூறுகையில், ‘மாநகரம் திரைக்கதையை போல், கைதி திரைக்கதையும் வித்தியாசமாக இருக்கும். கார்த்திக்கு ஜோடி கிடையாது. கதைப்படி தேவைப்படவில்லை. நரேன், மரியம் ஜார்ஜ், ரமணா, ஹரீஷ் பெராடி மற்றும் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த 25 வயதுக்குட்பட்ட ஏராளமான இளைஞர்கள் நடித்துள்ளனர்.

61 நாட்கள் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட முதல் படம் இது. ஜூலை மாதம் ரிலீசாகிறது’ என்றார். இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 64வது படத்தை லோகேஷ்  கனகராஜ் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

 

 

 

 

Related posts

21 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா

பிரபல நடிகை உயிரிழந்தார்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் “தர்பார்”