சூடான செய்திகள் 1

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை இம்மாதம் 20ம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.

அனுமதிப்பத்திரமற்ற அல்லது வேறு வகையில் சட்டவிரோத வெடிப் பொருட்களை வைத்திருப்போர் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் தகவல்களை வழங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு