(UTV|COLOMBO) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் போலி வதிவிட விசா மூலம் நாட்டில் தங்கியிருந்த 12 பங்களாதேஷ் நாட்டவர்கள் மல்வானை மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மல்வானை பிரதேசத்தில் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் 03 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி 09 பேர் சப்புகஸ்கந்த மற்றும் கிரிபத்கொட பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் மிரிஹானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.