வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு LTTE அமைப்பிற்கு தடை

(UTV|COLOMBO) இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை  நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சகம் நீடித்துள்ளது.

விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்கள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் தடுக்க தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இசையமைப்பாளர் சோமபால காலமானார்

சிம்பாபேயில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் பலி

ෆේස්බුක් ආයතනයට ඩොලර් බිලියන පහක දඩයක්