(UTV|COLOMBO) எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது.
இதனுடன் தொடர்புப்பட்ட பல நிகழ்வுகளும் இதில் இடம்பெறவுள்ளன. என்றும் இராணுவசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியங்க நாப்பாகொட தெரிவித்தார்.
கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.