(UTV|COLOMBO) குவாட்டமாலாவில் சிறைச்சாலையை அண்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.
இதனையடுத்து, சுமார் 1,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது பின்னர் மோதலாக மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.