வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்…

பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை.

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்கில் 33 கிமீ தூரத்தில் கடலுக்கடியில் 127 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இப்பகுதியில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கத்தினால் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. சில வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதால் பொருட்கள்  தரையில் விழுந்தன. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

 

 

 

Related posts

கண்டி-கண்டி மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Suspect arrested with 29.8 kg of Kerala cannabis

நாளை முதல் விமான சேவை ஆரம்பம்