சூடான செய்திகள் 1

கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்

(UTV|COLOMBO) மோதல்களைத் தடுக்கும் வகையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 128 முஸ்லிம் கைதிகள் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 75 பேர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கும் ஏனைய கைதிகள் வாரியபொல மற்றும் மஹர சிறைச்சாலைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும்,மாவனெல்ல சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 11 பேர் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாவனெல்ல பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களே தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை வெலிக்கடை, மெகசின், நீர்கொழும்பு, காலி, களுத்துறை உள்ளிட்ட 11 சிறைச்சாலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபள்யூ. தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

வாகன சாரதிகளே எச்சரிக்கை!

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது

ரோகண விஜயவீரவை தேடி தருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு