சூடான செய்திகள் 1

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது

(UTV|COLOMBO) சர்வதேச ரீதியில் 58 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் தரவுகளூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களில் 71 வீதமானவர்கள் ஆண்களாவர்.

அதேவேளை, இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் 50.2 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதுடன், அவர்களில் 32.4 வீதமானவர்கள் பெண்கள் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

8 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்தில்கொண்டு இந்த வருடம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதை அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது