சூடான செய்திகள் 1

விசா இல்லாமல் தங்கியிருந்த 13 வெளிநாட்டவர்கள் கைது

(UTV|COLOMBO) நாட்டின் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த 13 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , கல்கிஸ்ஸ – வடரப்பல பிரதேசத்தில் 6 பேரும் மற்றும் வெலிகட பிரதேசத்தில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் நைஜீரியா பிரஜைகள் எனவும் நவகமுவ பகுதியில் ஈரான் நாட்டவரும் , ரத்மலானை பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தெஹிவளை – நெதிமால பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் 38 வயதுடையவர் என காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

 

 

 

 

Related posts

ஹட்டன் மற்றும் கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பனிப்பொழிவு