(UTV|AMERICA) அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் புறநகர் பகுதியான டவுண்ட்டவுன் சியாட்டில் நகரில் 5-வது நெடுஞ்சாலை வழியாக நேற்று வழக்கம்போல் வாகனங்கள் விரைவாக சென்று கொண்டிருந்தன.
பிற்பகல் சுமார் 3 மணியளவில் மெர்கெர் தெரு மற்றும் பேர்வியூ அவென்யூ ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒரு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் திடீரென்று பயங்கர சப்தத்துடன் அறுந்து அவ்வழியாக சென்ற கார்களின்மீது வேகமாக விழுந்தது.