சூடான செய்திகள் 1

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

(UTV|COLOMBO) IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்கை நியூஸ் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு தீவிரவாத அமைப்பில் இணைவது சட்டவிரோதமற்றதென்பதால், அவர்கள் கைது செய்யப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் தாம் பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

2019 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீடு-ஜனாதிபதி

தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..

தேர்தல்கள் ஆணையாளரின் தீர்மானம்?