வணிகம்

மரக்கறி கொள்வனவிற்கு வரும் வர்த்தர்கள் குறைவு

(UTV|COLOMBO) மரக்கறி கொள்வனவு செய்வதற்கு வருகைதரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர் ஷாந்த ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

இதற்கமைய ஏனைய நாட்களில் 800 முதல் 1000 லொறிகள் மத்திய நிலையத்திற்கு வருகை தருகின்றபோதிலும் தற்போது 200 க்கும் குறைவான வர்த்தக லொறிகளே தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தருவதாக ஷாந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் சரிவு

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF

கட்டார் பொருளாதார அமைச்சரை சந்தித்த அமைச்சர் ரிஷாத்