(UTV|COLOMBO) அதன்படி சர்வ கட்சிகளும் பங்கேற்கும் மாநாடு இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதேபோன்று சர்வமத தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்றுமாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் சர்வ மதத்தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மற்றும் அங்கம் வகிக்காத அனைத்துக்கட்சிகளுக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.