சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

 

Related posts

இலங்கை தொடர்பான அறிக்கை, இன்று வெளியிடப்படும் சாத்தியம்…

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற App வசதி