(UTV|COLOMBO) வௌ்ளவத்தை பிரதேசத்தில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த வெடிப்புச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.