வகைப்படுத்தப்படாத

இலங்கை வெடிப்புச் சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்

(UTV|AMERICA) இலங்கைவெடிப்புச் சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பு, மீட்பு மற்றும் புதுப்பித்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான நாளில் நடந்திருக்கும் இந்த தாக்குதல், மனிதநேயத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன், இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

Related posts

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !

யொவுன்புர இளையோர் முகாம்