சூடான செய்திகள் 1

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து

(UTV|COLOMBO) நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்க நிர்வாகங்களுக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் பல்கலைக்கழகங்களின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத போதிலும் சேவைக்கு சமூகமளிக்க முடியாதவர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பல்கலைக்கழக விடுதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பினை மேலும் பலப்படுத்துமாறு அனைத்து பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது,

Related posts

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு?

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்