விளையாட்டு

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…

(UTV|INDIA) பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனி அதிரடியாக ஆடியும் அந்த அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், இலக்கை நோக்கி பயணித்த சென்னை அணி, துக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், கேப்டன் தோனியின் நிதானமான ஆட்டத்தால், சென்னை அணி சற்று நிமிர்ந்தது. ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், அதாவது, 15 ஓவர்களுக்குப் பின், தோனி தன் வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் சிக்சர் மழை பொழிந்தார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீச, அதில், ஒரு பவுன்டரி மற்றும் மூன்று சிக்சர்கள் அடித்தார்.
இந்த போட்டியில், 47 பந்துகளில், 84 ரன்கள் எடுத்திருந்த தோனி, ஆட்டத்தின் கடைசி பந்தை தவறவிட்டார்.

பந்து கீப்பர் வசம் சென்றதாலும், ரன் எடுத்துவிடலாம் என்ற ஆர்வத்தில், அவர் ஓடினார். அப்போது எதிர் முனையில் இருந்த வீரர் ரன் அவுட் ஆனார்.

அதனால்,சென்னை அணியால், 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, பெங்களூரு அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 

 

 

Related posts

சர்வதேச கிக் பொக்சிங்; இலங்கைக்கு 11 தங்கம்

காற்று மாசுபாடு வீரர்களின் உத்வேகத்தை குலைக்கும்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 12-வது முறையாக தொடர் வெற்றி