சூடான செய்திகள் 1

மொஹமட் அப்ரிடி கைது

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் என்பவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கமகேவத்த, சாலமுல்ல, கொலன்னாவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதாள உலக குழு உறுப்பினர் மாகந்துர மதூஸூடன் டுபாயில கைது செய்யப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட 50 வயதான பியல் புஸ்பகுமார ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(18) முதல் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லாததால் அவரை இவ்வாறு விடுவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கோட்டை நீதவான் திலின கமகேவை கொலை செய்வதற்கான சதித்திட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது