சூடான செய்திகள் 1

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள்…

(UTV|COLOMBO) இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18ஆம் திகதி) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இதற்கமைய  நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய அட்லாண்டிக் பகுதியில் வைத்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ஆகிய மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் இருவரே, இந்த ‘இராவணா வன்’ செயற்கைக் கோளைத் தயாரித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஜப்பானின் கியூஷு தொழிநுட்ப நிறுவனத்தில், பொறியியல் பீடத்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை 2.16 மணியளவில் ஏவப்பட்ட செயற்கைக் கோளானது, நாளை மாலை 6.30 மணியளவில் விண்வௌியை அடையவுள்ளது.

 

 

 

 

Related posts

மே மாதம் 21 ஆம் திகதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் ஆரம்பம்…

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்”