(UTV|COLOMBO) நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக இடியுடன்கூடிய மழையுடனான வானிலை தொடரந்து நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றுமு; மேல் மாகாணங்களிலும், மன்னர் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் கடும் மழை பெய்யக்கூடும்.