சூடான செய்திகள் 1

வறட்சியான காலநிலை காரணமாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO) வட மாகாகணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 28 ஆயிரத்து 950 குடும்பங்களை சேர்ந்த 99 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 53 ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 296 பேரும், கிளிநொச்சியில் 5 ஆயிரத்து 720 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 20ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

பல கோடி ரூபா பெறுமதியான பாரிய தொகை ஹெரோயின் மீட்பு