விளையாட்டு

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள பங்களாதேஷ் வீரர்கள்…

(UTV|BANGALDESH) 2019 உலக கிண்ண ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இன்று இதனை வெளியிட்டுள்ளது.

இதில் அண்மையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹசன் மீண்டும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவர் பங்களாதேஷ் அணிக்கு உப தலைவராக செயற்படவுள்ளதுடன், அணியின் தலைவராக, மஸ்ராபே மொர்டசா செயற்படவுள்ளார்.

இதற்கமைய, 15 பேர் கொண்ட இந்த குழாமில், Mashrafe Mortaza (C), Tamim Iqbal, Mahmudullah, Mushfiqur Rahim, Shakib Al Hasan (VC), Soumya Sarkar, Liton Das, Sabbir Rahman, Mehidy Hasan, Mohammad Mithun, Rubel Hossain, Mustafizur Rahman, Mohammad Saifuddin, Mosaddek Hossain, Abu Jayed ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் தேர்தல் 02 வாரங்களுக்கு பிற்போடப்பட்டது

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று