சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியதற்குமான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. மின்னல் தாக்கங்களினாலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

 

 

Related posts

நாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாது

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

மேல் மாகாண சபைக்கான கதிரை கொள்வனவு இடைநிறுத்தம்-ஹேமகுமார நாணயக்கார