சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்…

(UTV|COLOMBO) தற்போதைய பண்டிகை காலப்பகுதியில் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய  மதுபோதையில் வாகனம் செலுத்தல் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தல் உள்ளிட்டவற்றை தடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இத்துடன், பட்டாசுக்கள் கொளுத்தும் போது, தீக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ளாது அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்த பண்டிகைக் காலப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் அவதானமாக பெற்றோர் இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து பிரிவு கோரியுள்ளது.
இதனிடையே, மதுபோதையில் வாகனம் செலுத்துவோர், போக்குவரத்து விதிகளை மீறுவோரை கைது செய்வதற்கான காவற்துறையினர் மேற்கொண்டுள்ள விசேட சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இன்று நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மரண தண்டனைக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்