சூடான செய்திகள் 1

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதை அறிவிக்க தொலைபேசி இலக்கம்…

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தில் பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவைகள் அமுல் படுத்தப்படுகிறது.
அந்தநிலையில், இவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளே அதிக கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவித்த, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி, அவ்வாறு அதிக கட்டணங்கள் அறவிடப்படும் சந்தர்ப்பத்தில், 1955என்ற தொலைபேசி இலக்கத்திற்கு  அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்ததோடு இந்நிலையில், 0117555555 மற்றும் 0771056032  கைபேசி இலக்கங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வானிலை…

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor

சஜித் உள்ளிட்ட ஐ.தே. க 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்; ரணிலின் முடிவு என்ன?