வகைப்படுத்தப்படாத

எதிர்வரும் சில நாட்களுக்கு ஜனாதிபதி எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டார் – ஜனாதிபதி செயலகம்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எதிர்வரும் சில நாட்களுக்கு எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவும்; இந்திய பீஹார் மாநிலதில் புதிய நாலந்தா மகா விகாரை பல்கலைக்கழக நிகழ்வில் பங்குபற்றவுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாகவே ஜனாதிபதி செயலகம் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.

எவ்விதத்திலும் உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்பட்டிருப்பதனால் அந்த செய்தியை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி அடுத்துவரும் சில நாட்களில் எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டாரெனவும் ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சட்டம் தன் கடமையை செய்யும்

பல வீதிகளில் போக்குவரத்திற்கு தொடர்ந்தும் தடை

අද (13) දිනයෙත් දිවයින පුරා වැසි