சூடான செய்திகள் 1வணிகம்

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

(UTV|COLOMBO) எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
ஆரம்ப கட்டமாக மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும்.
இதன்பின்னர் வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தேவைக்கேற்ப விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

டுபாயிலிருந்து 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்க முயற்சி – றிசாட்

அமெரிக்கா இராஜாங்க செயலாளர் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இடையே சந்திப்பு