(UTV|COLOMBO) 2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த வரவு செலவு திட்டத்தின் முன்வைத்தார்.
அதன்படி கடந்த 12ம் திகதி வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இதன்போது வரவு செலவு திட்டத்தின் ஆதரவாக 119 பேர் வாக்களித்துடன், எதிராக 76 பேர் வாக்களித்திருந்தனர்.
மேலும் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவளித்திருந்ததோடு ஜேவிபி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்பன வரவு செலவு திட்டத்தின் எதிராக வாக்களித்த நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.
அந்தநிலையில் இன்றையதினம் வரவு செலவு திட்டத்தின் இறுதி வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதன்படி வரவு செலவு திட்டத்தின் ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தீர்மானிக்கவுள்ளது.
வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சி இன்னும் தீர்மானத்துக்கு வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.