கேளிக்கை

விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர இயக்குநர் முடிவு?

(UTV|INDIA) சக்ரி டோலட்டி நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படத்தை முதலில் தயாரித்து வந்த யுவன் ஷங்கர் ராஜா, சில கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் பொறுப்புகளிலிருந்து விலகினார். இதனையடுத்து இந்த படத்தை மதியழகன் தயாரித்தார். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் நயன்தாரா குறித்து ராதா ரவி சர்ச்சையாகப் பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நான் நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி’ என்று பதிவு செய்திருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவால் இப்படத்தை வாங்க இருந்த விநியோகஸ்தர்கள் யாரும் தற்போது முன்வரவில்லை.

இதனிடையே ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்குப் பின் சாட்டிலைட் உரிமையை பெற்றுக்கொள்வதாகக் கூறிய பெரிய நிறுவனம் ஒன்று தற்போது விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீது இப்படத்தின் இயக்குநர் சக்ரி டொலட்டி வழக்கு தொடர இருப்பதாகவும், இதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு விக்னேஷ் சிவனே பொறுப்பேற்க வேண்டும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ரஜினிகாந்தை வைத்து பேய்படம்?

ஜூலியை களமிறக்கும் அனிருத்

“மதத்தை என்னில் திணிக்க வேண்டாம்”