விளையாட்டு

காற்பந்து விளையாட்டு ஜாம்பவன் பீலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

(UTV|PARIS)  காற் பந்து விளையாட்டின் ஜாம்பவனான பீலே, சிறுநீர் தொற்று காரணமாக பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் அணியின் அசாத்தியமான வீரராக திகழ்ந்த பீலே, 1958, 1962, மற்றும் 1972-ஆம் ஆண்டுகளில் தனது அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர். 78 வயதான பீலே அவ்வப்போது உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்படவே பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பீலே உடல் நலம் தேறி இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

 

 

 

Related posts

நவோமி ஒசாகாவுக்கு அபராதம்

ICC – 2024-2031 : ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிவிப்பு

இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு சுருண்டது