சூடான செய்திகள் 1

48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க புகையிரத தொழிற்சங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO) சம்பள பிரச்சினையை முன்வைத்து எதிர்வரும் 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க புகையிரத  தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்தக தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், போக்குவரத்து அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தொடருந்து நிலைய அதிபர்கள், சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொடருந்து கண்காணிப்பு முகாமையாளர்கள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

(UPDATE)-பாராளுமன்றம் ஒத்திவைப்பு

சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பதற்கு திட்டம் !

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு